பாளையங்கோட்டை அருகே பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர், பாஜக மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இருந்து வந்தார். கடந்த 30ம் தேதி அவர் தன்னுடைய வீட்டின் அருகே நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சென்ற மர்மகும்பல், ஜெகனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளுள் ஒருவரான திமுக பிரமுகர் பிரபு, வெளியூருக்கு தப்ப முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் இதுவரை 7 பேர் கைதான நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.







