நடிகர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் மறக்குமா நெஞ்சம் மொமண்ட் என பகிர்ந்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’ டைம் டிராவல் கதையைக் கொண்ட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சுனில், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதற்கு முன்பு வெளியான விஷால் படங்களின் முதல் நாள் வசூலை இந்தப் படம் முறியடித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரான மார்க் ஆண்டனி முதல் நாளில் ரூ.7 முதல் 9 கோடிவரை வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்களிடம் நல்ல விமர்சனம் உள்ளதால் தொடர்ந்து இன்று, நாளை, நாளை மறுதினம் விடுமுறை நாட்கள் என்பதால் படம் வசூலில் ஜொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://twitter.com/vinod_offl/status/1703047984131325957
இந்த படத்தின் ஆரம்பத்தில் நடிகர் விஜய்யிக்கு நன்றியும் தெரிவித்து இருந்தார்கள். ஆரம்பத்தில் படத்தின் டீசரை மார்க் ஆண்டனி படக்குழு நடிகர் விஜய்யிடம் காண்பித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் நடிகர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து, “இதுதான் எனக்கு மறக்குமா நெஞ்சம் மொமண்ட். இந்தக் கணத்தில் இருந்துதான் எல்லாமே சரியாக நடந்தது. மிக்க நன்றி விஜய் அண்ணா” எனக் கூறியுள்ளார்.







