மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
கால்பந்து உலகின் ஜாம்பவானும், உலகக் கோப்பை கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரரான பிரேசிலின் பீலே (வயது 82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
பிரேசில் நாட்டின் சாவ் பாலோ மருத்துவமனையில் உள்ள பீலேவின் உடல் இன்று காலை அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பீலேவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதியில் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இங்கு நடக்கும் இறுதி சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. கால்பந்து நாயகன் பீலேவின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.







