சேலம் விமான நிலையத்தில் விமான சேவைக்கான ஏல நடைமுறைகள் முடிவடைந்தவுடன் விரைவில் சேலம் விமான நிலையத்தில் இருந்து விமான சேவை தொடங்கும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 ஜூன் 2ம் தேதி முதல் சேலம் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. மேலும், சேலம் விமான நிலையத்திலிருந்து விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக மக்களவையில் தி.மு.க உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, சேலம் விமான நிலையத்தில் இருந்து விமான சேவைக்கான ஏலம் ஏற்கனவே விடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விமான சேவைகள் விரைவில் தொடங்குவது உறுதி செய்யப்படும் என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், இது தொடர்பான கோரிக்கைகளுக்காக தன்னை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உறுப்பினர்கள் சந்திக்கலாம் எனவும் அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
-ம.பவித்ரா