மீன்பிடி தடைக்காலம் வரும் 15ம் தேதி தொடங்க உள்ளதால், சென்னை காசிமேடு சந்தையில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.
காசிமேடு மீன்பிடி சந்தையில் இன்று பெரிய வகை மீன்கள் வரத்துக் குறைவால் மீன்களின் விலை உயர்வு. அத்துடன், ஈஸ்டர் பண்டிகை என்பதால் அதிகாலை முதலே மீன்கள் வாங்க கடும் கூட்டம்.
காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் வருகின்ற 15-ம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் வரவிருக்கும் நிலையில், இன்று குறைந்த அளவு விசைப் படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றது. இதனால் பெரிய வகை மீன்கள் வரத்துக் குறைவாக இருந்ததால் மீன் பிரியர்கள் மீன்களை விலை சற்று அதிகமான விலைக்கு வாங்கிச் சென்றனர்.
மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைவரும் வீட்டில் இருப்பதால், நேற்று காலை முதல் ஏராளமானோர் மீன்வாங்க காசிமேடு சந்தைக்குப் படையெடுத்தனர். இதனால் காசிமேடு பகுதி முழுவதும் அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியதைக் காண முடிந்தது.சிறு வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் மீன்களைப் போட்டிப் போட்டு மீன்களை வாங்கி சென்றனர்.







