ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டு வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 393 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 386 ரன்களும் எடுத்தன.
இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 273 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 92.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 65 ரன்களும், பேட் கம்மின்ஸ் 44 ரன்களும் குவித்தனர்.
இதே மைதானத்தில் கடந்த 2005 இல் 282 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 2 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் ஆஸ்திரேலியா தோல்வியுற்றது . இந்த முறை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா அணி சார்பில் உஸ்மான் கவாஜா 64 ரன்கள், பேட் கம்மின்ஸ் 44* ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஆசஷ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 தொடருக்கான புள்ளிப் பட்டியலில் முதல் வெற்றியுடன், 12 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது ஆஸ்திரேலியா அணி.







