‘கோட்’ படத்தின் முதல் நாள் வசூல் | ‘லியோ’வை விட குறைவா?

விஜயின் தி கோட் திரைப்படம் முதல் நாளில் ரூ. 126.32 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த…

விஜயின் தி கோட் திரைப்படம் முதல் நாளில் ரூ. 126.32 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.

நேற்று முதல் காட்சி ரிலீஸ் ஆனதில் இருந்து படம் கலவையான விமர்சனங்களதான் பெற்று வருகிறது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் நேற்று படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் தருணங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்திருக்கும் நிலையில் கேரளா, ஆந்திரா மற்றும் இந்தி பேசும் மாநிலங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.

மேலும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழக்கைப் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு படம் பெரியளவில் ரசிகர்களை தியேட்டர்களை நோக்கி ஈர்க்கவில்லை. இந்நிலையில் கோட் திரைப்படம் முதல் நாளில் 126 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபப்ட்டுள்ளது. ஆனால் லியோ திரைப்படம் முதல் நாளில் 148 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து தி கோட் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது நாளில் இந்தியா முழுவதும் பாக்ஸ் ஆஃபீஸில், ரூபாய் 25 கோடி வசூல் செய்ததாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் நாளையும் விநாயகர் சதூர்த்தி மற்றும் வார இறுதி நாள் என்பதால், படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என படக்குழு நம்புகின்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.