உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு 3 பெட்டிகளில் எரிந்து சேதமடைந்தன.
இந்த ரயிலின் எஸ்1 பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து மற்ற பெட்டிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. ரயிலில் தீ விபத்தை தொடர்ந்து உடனடியாக பயணிகள் இறக்கிவிடப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து வட மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் கூறுகையில், “ரயில் தீ விபத்தில் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.







