இறுதிப்போட்டி: குஜராத் பேட்டர்கள் தடுமாற்றம்…!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் குஜராத் அணி 116 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பெங்களூரு – குஜராத் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து வரும் குஜராத் அணி 16.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

அணியின் முக்கிய வீரர்களான சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், கேப்டன் கில், நிஷாந்த் சிந்து, அர்ஷத் கான், ராகுல் தெவாட்டியா உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவு ஆட் ஆகினர்.

பலம் வாய்ந்த பேட்டிங் கொண்ட பெங்களூரு அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்தால் மட்டுமே குஜராத் இப்போட்டியில் வெல்ல முடியும்.

தற்போது களத்தில் வாஷிங்டன் சுந்தர் (36) மற்றும் ஜேசன் ஹோல்டர் (2) ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.