இறுதிப்போட்டி: குஜராத்திற்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சு தேர்வு…!

குஜராத்திற்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

2026 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பெங்களூரு – குஜராத் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் இப்போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

அணி விவரம் :

குஜராத் டைட்டன்ஸ் – ஷுப்மன் கில் (C), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர் (WK), ஜேசன் ஹோல்டர், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், நிஷாந்த் சிந்து, ககிசோ ரபாடா, அர்ஷத் கான், மற்றும் முகமது சிராஜ்.

பெங்களூரு – விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (C), க்ருனால் பாண்டியா, டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா (WK), ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், ஜேக்கப் டஃபி மற்றும் ரசிக்லாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.