முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல்!

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த திரைப்பட இயக்குநர் கே.வி. ஆனந்திற்கு தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டரில்,


மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த கார்த்திக் சுப்புராஜ், அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் எனத் தெரிவித்தார்.

நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி வெளியிட்ட இரங்கல் செய்தியில், கே.வி. ஆனந்த் மறைவை குறிப்பிட்டு, இந்தாண்டு தமிழ் திரைத்துறைக்கு மிகவும் மோசமான ஆண்டு என பதிவிட்டுள்ளார்.

நடிகை குஷ்பு

இயக்குநர் கே.வி. ஆனந்தின் இந்த திடீர் மறைவு நம்பமுடியவில்லை என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்

கே.வி. ஆனந்த் இறப்புக்கு, அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்த அல்லு அர்ஜுன், அவர் ஒரு மிக சிறந்த ஒளிப்பதிவாளர், திறமையான இயக்குநர் மற்றும் சிறந்த மனிதர் என்றும் தெரிவித்துள்ளார்.

பாடலாசிரியர் வைரமுத்து

‘விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே. வி. ஆனந்த்’ என தனது கவிதை வரிகளால் பாடலாசிரியர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், அயன், மாற்றான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கே. வி. ஆனந்துடன் இணைந்து பணியாற்றியவர்.

இயக்குநரும் தனது நண்பருமான கே. வி. ஆனந்தின் மரண செய்தி அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்ட ஹாரிஸ் ஜெயராஜ், அவரது ஆன்மா சாந்தியடையட்டும் எனத் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த்

மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்தின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் எனத் தெரிவித்திருந்தார்.

மலையாள நடிகர் மோகன்லால்

நம் கண்களில் இருந்து கே.வி. ஆனந்த் மறைந்திருந்தாலும் நம் உள்ளத்தில் என்றென்றும் நிறைந்திருப்பார் என அவர் தெரிவித்தார்.

இயக்குநர் செல்வராகவன்

நண்பர் கே.வி. ஆனந்த் ஆன்மா சாந்தியடையட்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் கமல்ஹாசன்

பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு  சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி. எனத் தெரிவித்திருந்தார்.

Advertisement:

Related posts

ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை!

Ezhilarasan

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து பிரதமர் ஏன் பேசவில்லை; மு.க.ஸ்டாலின் கேள்வி

Saravana Kumar

சசிகலாவை சந்திக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்

Nandhakumar