ஃபெஞ்சல் எதிரொலி – நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

மழை காரணமாக நாளை பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அருகே நிலவி வந்த “ஃபெஞ்சல்” புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. அது தற்போது கடலூருக்கு வடக்கே 30…

ஃபெஞ்சல் எதிரொலி - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

மழை காரணமாக நாளை பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அருகே நிலவி வந்த “ஃபெஞ்சல்” புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. அது தற்போது கடலூருக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும், விழுப்புரத்திற்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்மேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அது மேற்கு நோக்கி மிக மெதுவாக நகர்ந்து, 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களில் கனமழை பெய்து, வெள்ளநீர் புகுந்துள்ளது. புதுவையின் பல இடங்களிலும் கனமழை காரணமாக வெள்ளநீர் புகுந்தது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் புதுச்சேரியில் நாளை (டிசம்பர் 2) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் புதுச்சேரி தத்தளித்து வரும் நிலையில் விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். அதுபோல திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.