நயன்தாரா நடிக்கும் ‘டெஸ்ட்’ படத்தில் இசையமைப்பாளராக களமிறங்குகிறார் பெண் பாடகி; ஏ.ஆர். ரகுமான் வாழ்த்து!

 ‘டெஸ்ட்’ படத்தில் பெண் பாடகியான சாக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் திறமை மிகுந்த தயாரிப்பாளரான எஸ். சஷிகாந்த், தனது 23வது…

 ‘டெஸ்ட்’ படத்தில் பெண் பாடகியான சாக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் திறமை மிகுந்த தயாரிப்பாளரான எஸ். சஷிகாந்த், தனது 23வது தயாரிப்பான ‘டெஸ்ட்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

கதை சொல்லலில் ஆழ்ந்த ஆர்வம், திறமைகளை கண்டறிவதில் மிகுந்த ஈடுபாடு, புதிய முயற்சிகளை கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றால் இதுவரை அறியப்பட்ட எஸ்.சஷிகாந்த்தின் திரைப்பட இயக்கத் திறமையை பறைசாற்றவுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் பிரபல நட்சத்திரங்களான மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

https://twitter.com/arrahman/status/1654109508132798464?s=20

இந்நிலையில், இந்த படத்தில் சாக்தி ஸ்ரீ கோபாலன் என்பவர் இசையமைப்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.