தந்தை பெரியார் பிறந்த நாள் – தவெக தலைவர் விஜய் மரியாதை!

தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியாரின் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து  பல்வேறு அரசியல் கட்சியினரும் பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்   தவெக  தலைமையகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பெண்கள் முன்னேற்றம் சுயமரியாதை பகுத்தறிவுச் சிந்தனை சமூக சீர்திருத்தக்கொள்கை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்ற சீர்திருத்த சிந்தனைகள் வாயிலாக நம் மக்களுக்காக உழைத்த எம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்ததினமான இன்று சென்னை பனையூரில் உள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.