பால் பண்ணையில் பயங்கர வெடி விபத்து; தீயில் கருகி 18,000 பசுக்கள் பலி!

டெக்சாஸில் உள்ள ஒரு பால் பண்ணையில், வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து 18,000க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்தன. தீயணைப்பு வீரர்கள் விசாரணையில் சம்பவத்தின் ஆதாரம் தெரியவில்லை என்று தெரிவித்தனர். இந்த நிகழ்வு டிமிட் அருகே உள்ள…

டெக்சாஸில் உள்ள ஒரு பால் பண்ணையில், வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து 18,000க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்தன.

தீயணைப்பு வீரர்கள் விசாரணையில் சம்பவத்தின் ஆதாரம் தெரியவில்லை என்று தெரிவித்தனர். இந்த நிகழ்வு டிமிட் அருகே உள்ள சவுத் ஃபோர்க் டெய்ரியில் நடந்தது. இந்த பண்ணை மாகானதில் அதிக பால் உற்பத்தி செய்யும் இடங்களில் ஒன்றாக இருந்தது. அமெரிக்காவின் விலங்கு நல வாரியம், இந்த சம்பவத்திற்குப் பிறகு, எதிர்காலத்தில் மாட்டுக் கொட்டகையில் தீப்பிடிப்பதைத் தடுக்க உதவும் சட்டத்தையும் உதவியையும் அரசிடம் கோரியுள்ளது.

https://twitter.com/LaurenWitzkeDE/status/1646362070546550785?s=20

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்காவில் நடந்த மிக பயங்கரமான தீ விபத்து இது ஆகும் என்று செய்தித் தொடர்பாளர் மார்ஜோரி ஃபிஷ்மேன் கூறியுள்ளார். தீப்பிழம்புகளிலிருந்து விலங்குகளைப் பாதுகாக்கும் கூட்டாட்சிச் சட்டங்கள் தற்போது இல்லை.

https://twitter.com/ShotGun_Bonnie/status/1646258240173268992?s=20

அதே நேரத்தில் பல அமெரிக்க மாகாணங்கள் தங்கள் சொந்த பாதுகாப்புச் சட்டங்களை இயற்றியுள்ளன. அவற்றில் டெக்ஸாஸ் இடம்பெறவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 6.5 மில்லியன் விவசாய விலங்குகள் இந்த தீயில் இறந்துள்ளன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.