விஜயின் படத்தை உடலில் டாட்டூவாக வரைந்த ரசிகர்!

நடிகர் விஜய் பிறந்தநாள் இந்த மாதம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி உடலில் விஜயின் முகத்தை ரசிகர் ஒருவர் பெரிய டாட்டூவாக வரைந்துள்ளார். பன்முகத்திறன் வாய்ந்தவரும், தனது நடிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வசியப்படுத்திய இளைய…

நடிகர் விஜய் பிறந்தநாள் இந்த மாதம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி உடலில் விஜயின் முகத்தை ரசிகர் ஒருவர் பெரிய டாட்டூவாக வரைந்துள்ளார்.

பன்முகத்திறன் வாய்ந்தவரும், தனது நடிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வசியப்படுத்திய இளைய தளபதி என அழைக்கப்படுபவருமான திரைப்பட நடிகர் விஜயின் பிறந்தநாள் வருகிற 22ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. விஜயின் பிறந்தநாளில் கேக் வெட்டிக் கொண்டாடுவதும், நலத்திட்டங்கள் வழங்கியும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபடத் தயாராகி வருகின்றனர்.

இதனிடையே சேலத்தைச் சேர்ந்த விஜயின் தீவிர ரசிகரான ராஜ்பாரதி என்பவர் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். இவர் விஜய் நடித்த திரைப்படங்களை முதல்நாளில் பார்ப்பதும், பிறந்தநாளின் போது நண்பர்களுடன் கேக்வெட்டி கொண்டாடுவதுமாக இருந்த நிலையில், தனது உள்ளம் கவர்ந்த நடிகர் விஜய் தன் உடலுடன் ஒன்றியிருந்து அலங்கரிக்க வேண்டும். அதன்வாயிலாக விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடி வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று எண்ணிய நிலையில் திருச்சியில் பிரபல டாட்டூஸ் டிசைனரின் கைவண்ணத்தில் தனது முதுகில் நடிகர் விஜய்யின் முகத்தினை மிகப்பெரிய அளவில் பச்சை குத்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

இந்த டாட்டூ வரைவதற்கு 16மணிநேரம் எடுத்துக் கொண்டதாகவும், இந்த டாட்டூவை வரைந்துக் கொண்டதன் மூலம் நிச்சயம் விஜயை நேரில் சந்திக்கும் நீண்டநாள் கனவும் நனவாகக்கூடும் என்று நம்பிக்கையுடன், பிறந்தநாளை கொண்டாட நடிகர் விஜயின் இந்த இரு ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.