முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்

பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

தமிழ் திரையுலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் இயக்குனர் டி. பி. கஜேந்திரன். இவர், புகழ்பெற்ற நடிகை டி. பி.முத்துலட்சுமியின் மகனாவார். விசுவின் உதவியாளராக பணியாற்றிய இவரும் விசுவைப் போலவே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர் எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்மநாபன், மிடில்கிலாஸ் மாதவன், சீனா தானா உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். மேலும், பந்தா பரமசிவம், சந்திமுகி, வேலாயுதம், வில்லு, பேரழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

உடல்நல குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 72. சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“கண்ணீர் மிச்சமில்லையே” – நட்பால் உருகிய டென்னிஸ் ஜாம்பவான்கள்

Jayakarthi

“விடுதலை போரில் தமிழகம்” அருங்காட்சியகம்- முதலமைச்சர் திறந்து வைப்பு

G SaravanaKumar

சேது சமுத்திரத் திட்டம்- ஒரு சிறப்பு பார்வை

Jayasheeba