பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். கோவாவின் டோனா பவுலாவில் உள்ள அவரது வீட்டில் மயக்கம் அடைந்ததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணச் செய்தி திரைத்துறையினர், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்தியத் திரைப்பட உலகின் மிகவும் பிரபலமான, பன்முகத்திறமை கொண்ட பாலிவுட் மற்றும் மராத்தி நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் 2008 இல் வெளியான பொம்மலாட்டம் படத்தில் நடித்திருந்தார். இவர் 3 தேசிய விருதுகள், 4 பிலிம்பேர் விருதுகள் பெற்ற இவருக்கு 2013 இல் இந்திய அரசு பத்மஸ்ரீ வழங்கி கௌரவித்தது.




