குடும்ப பிரச்னை : கணவனின் பைக்கை கல்லால் உடைக்கும் மனைவியின் வீடியோ வைரல்..!!

கன்னியாகுமரி அருகே கருத்து வேறுபாட்டால் ஒரே வீட்டில்  பிரிந்து வாழும் கணவன் மனைவி இரு தரப்பினராக மோதி கொண்ட நிலையில் கணவரின் பைக்கை மனைவி கல்லால் தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் மாங்கரையை சேர்ந்தவர்…

கன்னியாகுமரி அருகே கருத்து வேறுபாட்டால் ஒரே வீட்டில்  பிரிந்து வாழும் கணவன் மனைவி இரு தரப்பினராக மோதி கொண்ட நிலையில் கணவரின் பைக்கை மனைவி கல்லால் தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் மாங்கரையை சேர்ந்தவர் சேவியர். கூலி
தொழிலாளியான இவரும்,  மனைவி ஹெலன் லதாவும் கருத்து வேறுபாட்டால் ஒரே
வீட்டில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நீதி மன்றத்திலும் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சேவியருக்கு ஆதரவாக அவரது  அண்ணன் ஜான் என்பவரும் ஹெலன் லதாவுக்கு ஆதரவாக  வழக்கறிஞர் கிறிஸ்டோபர் என்பவரும் பேசிய நிலையில் நால்வருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டு இரு தரப்பை சேர்ந்தவர்களும் காயமடைந்தனர்.
காயமடைந்த இருதரப்பை சேர்ந்தவர்களும் தனித்தனியே கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் இருதரப்பை சேர்ந்த 5-பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஹெலன் லதா  சாலையில் இருந்த  கணவரின் பைக்கை கல்லால்  உடைக்கும் வீடியோ காட்சி  வெளியாகி வைரலாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.