தமிழ்நாட்டிலும் ஷிண்டே, பவார் உள்ளனர் : சஸ்பென்ஸ் வைத்து பேசிய அண்ணாமலை..!!

தமிழ்நாட்டிலும் ஷிண்டே, அஜித் பவார் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் குமரி சங்கமம் என்னும் பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.…

தமிழ்நாட்டிலும் ஷிண்டே, அஜித் பவார் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் பாரதிய ஜனதா கட்சி
சார்பில் குமரி சங்கமம் என்னும் பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.

” கன்னியாகுமரிக்கு பிரசாரத்துக்கு வந்த மோடி குமரி மாவட்டத்தை தனது சொந்த மாவட்டமாக பாவித்தார். மீனவர்கள் இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடையாது. மீனவர்களின் தந்தை நரேந்திரமோடி. மோடி என்ன செய்தார் என நீங்கள் கேட்கலாம். முதன் முதலாக சுதந்திர இந்தியாவில் மீன்வளத்துறை அமைச்சரை உருவாக்கியவர் பிரதமர் மோடி. அதிலும் இணை அமைச்சராக எல்.முருகனை நியமித்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்.

நாம் என்ன செய்திருக்கிறோம் என சொல்லியுள்ளோம். திமுக என்ன செய்தது என சொல்ல வேண்டும். மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டப்படும் என சொன்னார்கள் இந்த செங்கல்தான் 2 லட்சம் வீடு. ஒரு வீடு கூட தமிழகத்தில் கட்டிக் கொடுக்கவில்லை. மீன்பிடி துறைமுகம் கட்டிக்கொடுக்கவில்லை. ரப்பர் உதிரி பாகம் தயாரிப்பு நிலையம் இல்லை. தகவல் தொழில்நுட்ப பூங்கா, ரப்பர் பூங்கா, நாகர்கோவில் தொழில் பேட்டை காணவில்லை. 571 வாக்குறுதிகளில் கன்னியாகுமரிக்கு எதுவும் இல்லை.

இதனை கேட்டால் உடனே எய்ம்ஸ் எங்கே என கேட்பார்கள். வடக்கிலும், கிழக்கிலும் உள்ளதால் தெற்கிலும் கட்ட வேண்டும் என டெல்லியில் உள்ள எய்ம்ஸ் போன்று கட்ட திட்டமிட்டுள்ளோம். 2026 மார்ச் மாதம் மதுரை எய்ம்ஸ் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். 150 மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள்.

உங்கள் தேர்தல் வாக்குறுதியில் எண் 54-ல் மதுரையில் வேளாண் பல்கலை வாக்குறுதி என்ன ஆனது. வேளாண் பல்கலைகழகம் செங்கலாக இருக்கிறது. நீங்க செய்யமாட்டீங்க செய்பவர்களையும் செய்ய விடமாட்டீர்கள். புதிய பாராளுமன்றம் கட்டி பிரதமர் சாஸ்டாங்கமாக வணங்கியதை மனோதங்கராஜ் மூச்சி இருக்கா உயிர் இருக்கா என கேட்கிறார். ஒரு அமைச்சர் டெப்பாசிட் கூட  பெறாமல் தோற்றார்
என்பதை அடுத்த தேர்தலில் நீங்கள் கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் 244 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியின் ஆவின் 34 லட்சம் லிட்டர் பாலை
வாங்குகிறது. அவர்கள் ஆவின் குடிநீர் திட்டம் கொண்டுவருவது அவர்களிம் ஸ்பிரிங்
குடிநீரை நம் தலையில் தள்ள வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை
கொண்டுவருகிறார்கள். ஒரு திருடனை பாதுகாக்க போலீஸ் துறை பயன்படுத்துகிறது. ஒரு ஊழல்வாதியை காப்பாற்றுகிறது இந்த அரசு. இரவு 2.30 மணிக்கு அமைச்சர்கள் போகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் எங்கள் குடும்பம் இல்லை என்பார். முதல்வரின் மருமகன் ஆஸ்பத்திரிக்கு போகிறார். ஸ்டாலினை பொறுத்தவரை ஆட்சி என்பது அமைச்சர்களுக்கும் அவரது குடும்பத்துக்கும்தான்.

பாட்னாவில் நடந்த எதிர்கட்சிகள் கூட்டத்தில் நடுவில் சரத் பவார் அமர்ந்தார்.
நாங்கள் ஒருங்கிணைந்துவிட்டோம் என்றனர்.அவரது கட்சியை சேர்ந்தவர்கள் மகாராஷ்டிராவில் 52 சட்டமன்ற உறுப்பினரில் 40 எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வுக்கு வந்து விட்டார்கள். எனக்கு வயதானதால் கட்சியின் செயல் தலைவராக பிரபுல் பட்டேலை நியமிக்கிறேன் என்றார். அந்த பிரபுல் பட்டேலே வந்துவிட்டார். இப்போது ஓரத்தில் இருந்த முதல்வருக்கு உதறல் வந்துவிட்டது. தயவுசெய்து பெங்களூருக்கு போய்விடாதீர்கள். அறத்தின் சாட்சிப்படி ஆட்சி அமைத்தால் மக்கள் ஆதரவு தருவார்கள்.

2 நாட்களுக்கு முன்பு கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவகுமார் காவிரியில் தண்ணீர் கொடுக்கமாட்டேன் எனச்சொன்னார். அதன் பிறகு நீங்கள் வடை சாப்பிடவா அங்கு போகிறீர்கள். மேகதாது அணையை கட்டியே திருவேன் என்கிறார் டி.கே.சிவகுமார்.

சரத் பவார் எம்.எல்.ஏக்கள் வெளியே போனது போல் தமிழகத்திலும் எம்.எல்.ஏ.க்கள் வெளியே போக வேண்டுமா..?  தமிழ்நாட்டிலும் சிண்டே, அஜித் பவார் உள்ளார்கள்.
குமரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் மோடி அமைச்சரவையில் கேபினட் அமைச்சராவார்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.