வெளியியானது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்; சேலம் மாணவி முதலிடம்!

தமிழ்நாட்ட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள்  தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்…

தமிழ்நாட்ட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள்  தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்  அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ்,  பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான  விண்ணப்ப பதிவு  கடந்த ஜூன் 28ஆம் தேதி தொடங்கி ஜூலை 12ம் தேதி வரை நடைபெற்றது.

அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களுக்கு 26,805 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,394 பேரும் என மொத்தம் 40,199 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், தகுதியான மாணவ, மாணவர்களின் தரவரிசைப் பட்டில் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று வெளியிடப்பட்டது

தரவரிசை பட்டியலில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிருத்திகா முதலிடம், தருமபுரியை சேர்ந்த பச்சையப்பன் 565 மதிப்பெண்கள் பெற்று தரவரிசையில் இரண்டாம் இடத்தையும், காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவன் முருகன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

தரவரிசை பட்டியலில் முதல் 10 இடம் பிடித்த மாணவர்கள்:

1) கிருத்திகா 569 மதிப்பெண் – சேலம்

2) பச்சையப்பன் 565 மதிப்பெண்கள் – தருமபுரி

3) முருகன் 560 மதிப்பெண்கள் -காஞ்சிபுரம்

4) ரோஜ 544 மதிப்பெண்கள் – திருவண்ணாமலை

5) அன்னபூரணி 538 மதிப்பெண்கள் -சிவகங்கை

6) அர்ச்சனா 537 மதிப்பெண்கள் -சேலம்

7) அன்னபூரணி 533 மதிப்பெண்கள் – அரியலூர்

8)  புகழேந்தி 531 மதிப்பெண்கள் -பெரம்பலூர்

9) கணேஷ் 530 மதிப்பெண்கள் -தேனி

10) சாம் 523 மதிப்பெண்கள் -திருப்பத்தூர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.