வெளியானது சாம்சங் BMW-M ஸ்மார்ட்போன்; பலரையும் கவரும் தனித்துவமான டிசைன்

மிகவும் விலை உயர்ந்த சாம்சங் கேலக்ஸி எஸ்-23 அல்ட்ரா பிஎம்டபிள்யூ எம் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது. சாம்சங் அண்மையில் தனது முதன்மையான சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy…

மிகவும் விலை உயர்ந்த சாம்சங் கேலக்ஸி எஸ்-23 அல்ட்ரா பிஎம்டபிள்யூ எம் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது.

சாம்சங் அண்மையில் தனது முதன்மையான சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra) ஸ்மார்ட்போனை உலகளவில் அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா பிஎம்டபிள்யூ எம் எடிஷன் ஸ்மார்ட்போன் தென் கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1986 ஆம் ஆண்டு அறிமுகமான முதல் தலைமுறை மாடலான பிஎம்டபிள்யூ எம்3 காரை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டது.

சாம்சங்கின் புதிய பிஎம்டபிள்யூ ஃபோன் தனித்துவமான வடிவமைப்பு தீம்களைப் பெறுகிறது. தனித்தன்மை மட்டுமே இந்த BMW M ஸ்மார்ட்போனின் சிறப்பு. இந்த சாம்சங்கின் BMW M பதிப்பு ஃபோன் 1,000 யூனிட்களுக்கு மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. இது SK டெலிகாம் வழியாக தென் கொரியாவில் விற்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா பிஎம்டபிள்யூ எம் சீரிஸ்: என்ன வித்தியாசம்?

Samsung Galaxy S23 Ultra BMW M பதிப்பு, தற்போதைய BMW M3 இன் பானட் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட கடினமான கேஸுடன் வருகிறது. இந்த அரிய ஸ்மார்ட்போன் பல்வேறு தலைமுறை BMW லோகோக்கள் கொண்ட வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பின் படி ரூ.1,12,842-க்கு விற்கப்படுகிறது.

Samsung Galaxy S23 அல்ட்ரா விவரக்குறிப்புகள்:

டிஸ்பிளே: 6.8-இன்ச் QHD+ எட்ஜ் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே.

பரிமாணங்கள்: 3.07 x 6.43 x 0.35 அங்குலம்

கேமரா: 200MP வைட் கேமரா, 12MP அல்ட்ரா-வைட் கேமரா, 10MP டெலிஃபோட்டோ (3X ஜூம்), 10MP டெலிஃபோட்டோ (10X ஜூம்), 12MP முன் கேமரா.

செயலி: Qualcomm Snapdragon 8 Gen 2 12GB ரேம் மற்றும் 1TB சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பேட்டரி: 5,000mAH.

OS: Android 13 அடிப்படையிலான One UI 5.1

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.