முக்கியச் செய்திகள் சினிமா Instagram News

இன்னும் பத்து நாட்களில் “தளபதி 67” அப்டேட் எதிர்பார்க்கலாம் – லோகேஷ்கனகராஜ்

இன்னும் பத்து நாட்களில் “தளபதி 67” அப்டேட் எதிர்பார்க்கலாம் என இயக்குநர் லோகேஷ்கனகராஜ் தெரிவித்துள்ளார். 

தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு கோவை வருமானவரித்துறை சார்பில் துடியலூர் பகுதியில் இளம் தொழில் முனைவோர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் லோகேஷ்கனகராஜ் கலந்து கொண்டார், இதில்
லோகேஷுக்கு விருது வழங்கி கௌரவிக்கபட்டதை தொடர்ந்து மேடையில் பேசினார். அதில் மற்ற துறைகளை தாண்டி சினிமா துறைக்கு வருமான வரித்துறை என்றாலே பயம்தான் எனவும் நேற்றுமுன்தினம் வருமானவரித் துறையிலிருந்து பேசுகிறோம் என தன்னை அழைக்கும் போது தனக்கும் அதுதான் தோன்றியது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் வருமான வரியாக செலுத்தும் பணம் எங்கு செல்கின்றது என்ற விழிப்புணர்வை
ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ், நாம் செலுத்தும் வரி எங்கு
செல்கிறது என தெரிந்தால் அதை சுமையாக பார்க்காமல் மகிழ்ச்சியாக செலுத்துவோம்,
எனவே அது குறித்து விழிப்புணர்வுகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெருவித்தார்.

மேலும் வாரிசு படம் வெளியாவதை ஒட்டி “தளபதி 67” அப்டேட் ஏதும் கொடுக்காமல் இருந்த்தகவும், தற்போது படம் வெளியாகிவிட்ட நிலையில் இன்னும் 10 நாட்களில் “தளபதி 67” அப்டேட் எதிர்பார்கலாம், அதன் தொடர்ச்சியாக அப்டேட்கள் வெளியாகும் எனவும் தற்போது படபிடிப்பு நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

சினிமாவில் யார் நம்பர் 1 என எழும் பேச்சுகள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, சினிமாவை பொருத்தவறை அனைத்து படங்களும் ஓட வேண்டும், எல்லா ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் தனது கருத்து என கூறிய லோகேஷ், தமிழ்நாட்டை “தமிழ்நாடு” என்று அழைப்பதையே விரும்புகிறேன் என தெரிவித்தார்.


திரைப்பபடம் வெளியாகும் கொண்டாட்டங்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க
வேண்டும், ரசிகர்களும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து கொண்டால் நன்றாக
இருக்கும் எனவும் வெறும் சினிமாதான், உயிரை விடும் அளவிற்கு முக்கியத்துவம்
கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, இது பொழுகுபோக்கு அம்சம் என்பதை தெரிந்து
கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சியாக சென்று படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு ஒழுக்கமாக வந்துவிட்டால்
போதும், ஒரு உயிரே போகும் அளவிற்கு கொண்டாட்டம் தேவை இல்லை, என்பதுதான்
எனது கருத்து என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம்; மக்கள் அவதி

G SaravanaKumar

வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய சீன படகு? போலீஸ் விசாரணை

G SaravanaKumar

மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

Gayathri Venkatesan