முக்கியச் செய்திகள் தமிழகம்

சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக்கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்துசெய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என பேரவை கருதுவதாக தெரிவித்தார்.

மக்களாட்சி தத்துவத்தின் படி, ஒரு நாட்டின் நிர்வாகம் என்பது அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கருத்தினையும், உணர்வுகளையும் அறிந்து அமைந்திருக்க வேண்டும் என தெரிவித்த முதலமைச்சர், இந்த குடியுரிமை திருத்த சட்டம், அகதிகளாக நாட்டிற்குள் வருபவர்களை பாகுபடுத்தி பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதன் காரணமாக இந்திய நாட்டின் ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் போற்றி பாதுகாக்க ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய சட்டப்பேரவை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. இதனையடுத்து குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்துசெய்யக்கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இதனிடையே, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், குடியுரிமை திருத்த சட்டம் 100% இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

அதிமுக, பாமக சமூக நீதிக்கான கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

எல்.ரேணுகாதேவி

ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள்: பிசிசிஐ முடிவு!

Halley karthi

மத்திய அரசை எந்தப் பெயரால் அழைத்தாலும், அதிகாரத்தை குறைக்க முடியாது: வானதி சீனிவாசன்

Gayathri Venkatesan