வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டுக்கு தீவைப்பு!

வங்கதேசத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பியுமான மஷ்ரஃபே மோர்டசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.  வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததால், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில்…

வங்கதேசத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பியுமான மஷ்ரஃபே மோர்டசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். 

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததால், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் வீட்டை சூறையாடினர். மேலும் ஆளும் அவாமி லீக் கட்சிக்கு சொந்தமான அலுவலகங்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர். தொடர்ந்து நரைல்-2 தொகுதி அவாமி லீக் கட்சியின் எம்.பி.யும், வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மஷ்ரஃப் மோர்டாசா வீட்டுக்குப் போராட்டக்காரர்கள் தீவைத்ததால், பதற்றம் நிலவியது.

இதுதவிர, சில இந்து கோயில்களையும் போராட்டக்காரர்கள் சூறையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.