தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஏசு நாதர் இல்லை என்றும், யூதாஸ் என்றும் அனைவருக்கும் தெரியும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற
அனைத்து கட்சி கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தான் நினைத்தால் நாளையே என்னுடைய கிராமத்திற்கு சென்று தோட்டத்தில் விவசாயம் செய்வேன் என்று அண்ணாமலை கூறியதை சுட்டிக்கட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாஜகவின் சனாதனதர்ம மனு நீதி படி பார்த்தால் அண்ணாமலை குல தொழில் தான் செய்திருக்க முடியும். கல்வி உரிமை பெற்று கொடுத்து அண்ணாமலையை ஐ.பி.எஸ் ஆக்கியது தான் திராவிட இயக்க அரசியல் என விளக்கமளித்தார்.
இந்த மண்ணில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி உரிமை என்பது மறுக்கப்பட்டது.
மீண்டும் சனாதன ஆட்சி வந்தால் சட்டத்தின் ஆட்சி இருக்காது, அண்ணாமலை கூறிய
கருத்து சரியானது தான் எனவும் கூறினார். அவர் உண்மையை தான் பேசியுள்ளார் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தான் ஏசு நாதர் இல்லை என்பதை கூறி விட்டார்.
ஆனால் நிச்சயமாக யூதாஸ் தான் என்பது தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் நன்றாக
தெரியும். விநாயகர் சதுர்த்திக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் வாழ்த்து
தெரிவிப்பதும் தெரிவிக்காமல் இருப்பதும் அவரது விருப்பம் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். தற்போதைய அரசு மத சார்பற்ற அரசு. முதலமைச்சருக்கு விருப்பம் இருந்தால் சொல்லட்டும். அது அவரது தனிப்பட்ட விவகாரம், இதற்கு அண்ணாமலை மட்டும் தான் வருத்தப்படுகிறாரே தவிர வேறு யாரும் வருத்தப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்