தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் நீட் இருக்கும் , திமுகவின் பித்தலாட்டத்தால் நீட்டை தடுத்து நிறுத்த முடியாது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை. வில்லுக்குறி சந்திப்பில் தொண்டர்களிடம் பேசினார் அவர் தெரிவித்ததாவது..

” தமிழ்நாடு கலாச்சாரத்தில் ஆணிவேரே குடும்பம் தான் அந்த குடும்ப ஆட்சியே
தற்போது திமுக தான். தமிழகத்திற்காகவும் குமரி மாவட்டத்திற்க்காகவும் 1954 ல் போராடிய போராளிகளின் பெயர்கள் இன்று வரலாற்று புத்தகத்தில் இல்லை.
இது வரை ஆறு முறை ஆட்சி செய்தபோது 5 மருத்துவ கல்லூரிகளை தான் திமுக ஆட்சி தந்துள்ளதுள்ளது. ஆனால் பிரதமர் மோடி அதிகளவு மருத்துவ கல்லூரிகளை தந்துள்ளார். 30 ஆயிரம் கோடி ஊழல் என குடும்ப ஆட்சிக்கு எதிராக பேசிய பி டி ஆருக்கு ஏன் டம்மி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 18 ஆயிரம் பள்ளிகளை திறந்து , 7 சதவிகிதமாக இருந்த கல்வி அறிவை
35 சதவிகிதமாக மாற்றிய கர்ம வீரர் காமராஜருக்கு மரியாதை இல்லை. இது போன்று தான் நீட் தேர்வும், தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் நீட் இருக்கும் திமுகவின் பித்தலாட்டத்தால் நீட்டை தடுத்து நிறுத்த முடியாது” என அண்ணாமலை
தெரிவித்தார்.







