புறநகரில் பெய்த கனமழையால் வண்டலூர் ஜி.எஸ்.டி.சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கியது.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் மழை பெய்தது அதே போல் சென்னை புறநகர் பகுதியில் லேசான மழை பெய்தது. தாம்பரம் குரோம்பேட்டை பல்லாவரம் முடிச்சூர் பெருங்களத்தூர் வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதியில் லேசான மழை பெய்தது. 30-நிமிங்கள் பெய்த மழையால் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் ஒரு அடிக்கும் மேல் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் தண்ணீரில் ஊர்ந்து செல்கின்றது இரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் கிளாம்பாக்கம் பேருந்து
நிலைய வளாகத்தில் 3 அடிக்கும் அதிகமான உயரத்தில் தண்ணீர் தேங்கியது இந்த
நிலையில் லேசான மழைக்கே மீண்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் மழை தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.







