பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 22-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில், இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான அட்டவணையை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொறியியல் படிப்பு கலந்தாய்வு வரும் 22-ம் தேதி தொடங்குவதாகவும், 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும்,
அதனை தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கு மூன்று கட்டமாக கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவித்தார். முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரையிலும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 22_ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரையிலும் நடைபெறும் என கூறினார்.







