பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்கள் பிடித்த மாணவ மாணவிகள் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்…
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 54 ஆயிரம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை நடைபெற்றது. பொறியியல் கல்லூரிகளில் சேர இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 167 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அதில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 124 பேர் விண்ணப்பக் கட்டணங்களுடன், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 20-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியானது. இந்த தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். இதன்படி 102 பேர் 200-க்கு200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல்: சாதித்த மாணவ மாணவிகள்:
1. நேத்ரா – சிறுதொண்டநல்லூர், தூத்துக்குடி
2. ஹரிணி – ஜடயம்பட்டி, தருமபுரி
3. ரோஷினி பானு – மேலவாடி, திருச்சி
4. கௌரிசங்கர் – பெத்தாம்பட்டி, சேலம்
5. சாந்தகுமார் – தருமபுரி
6. ராஜேஷ் – சடையம்பாளையம், கரூர்
7. பிரேம் பாலாஜி – பூலுவபட்டி, திருப்பூர்
8. தனிஷா ஸ்ரீராம் – சென்னை
9. ரிதிகா – திருமங்கலகோட்டை, தஞ்சாவூர்
10. ஷிவானி – மேலணிக்குழி – அரியலூர்
அரசு பள்ளியில் படித்து பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடம் பிடித்த மாணவ, மாணவிகள்:
1. மஹாலக்ஷ்மி – தருமபுரி
2. நிவேதிதா – நாகப்பட்டினம்
3. சரவணக்குமார் – பொள்ளாச்சி
4. அழகேசன் – தருமபுரி
5. மஹாஸ்வேதா – திருப்பூர்
6. நாதிஷ் – கோயம்புத்தூர்
7. தாரிக் அஜீஸ் – மேட்டுப்பாளையம்
8. பவித்ரா – நாமக்கல்
9. தீபக் -கொண்டப்பநாயக்கன்பாளையம்,
10. ஐகோர்ட் சின்னத்துரை – நல்லூர்









