முக்கியச் செய்திகள் தமிழகம்

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்த எலான் மஸ்க்

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், அமேசான் நிறுவன நிர்வாக தலைவர் ஜெஃப் பெசோசை முந்தி முதலிடத்தை பிடித்துள்ளார் டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்

ரூ.17,36,670… பலருக்கு இந்த பணத்தை சேர்ப்பது அவர்களது வாழ்நாள் கனவாக இருக்கும். ஆனால் 51 வயதே ஆன எலான் மஸ்க்கிற்கு இந்த நம்பர் அவரது கோடிகளின் எண்ணிக்கைதான். ஆம். பிரபல பத்திரிக்கையான போர்ப்ஸ் வெளியிட்ட கணிப்புபடி எலான் மஸ்க்கின்  சொத்து மதிப்பு  17,36,670 கோடி ரூபாய். பிரபல எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்தான் தற்போது உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுவரை இந்த பட்டத்தை  தக்கவைத்துக்கொண்டிருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசைவிட 3,80,640 கோடி ரூபாய் அதிகம் சொத்து சேர்த்து உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆகியுள்ளார் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவன பங்குகளை விற்றது மற்றும் அதற்கான வரிகளை கட்டியது ஆகியவற்றுக்கு பின்னரும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு எலான் மஸ்க்கிற்கு 5,39,240 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் சொத்து சேர்ந்துள்ளது.

2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கடந்த 2012ம் ஆண்டுதான் போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலக பணக்காரர்கள் பட்டியலில் இணைந்தார் எலான் மஸ்க். கடந்த 10 ஆண்டுகளில் அவர் உலகின் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். உலகின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலை நீண்ட நாட்கள் தக்க வைத்தவர் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்தான். சுமார் 17 ஆண்டுகள் அந்த இடத்தை பில்கேட்ஸ் தக்கவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதலீடு ரூ.16 கோடி… வசூல் ரூ.200 கோடி… கலக்கி வரும் காந்தாரா

Web Editor

ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் தென்னை மரங்கள் சேதம்: பொதுமக்கள் அச்சம்

Web Editor

அரசு மருத்துவமனைகளை நவீனமயமாக்க நடவடிக்கை: ஊர்வசி அமிர்தராஜ்

Gayathri Venkatesan