திருவனந்தபுரம் அருகே கோயில் திருவிழாவில் மிரண்ட யானை!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கோயில் திருவிழாவில் யானை மிரண்ட போது பக்தர்கள் சிதறியடித்து ஓடியதில் ஐந்து பேர் காயம் அடைந்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கரும்புக் கோணம் தேவி கோவிலில் திருவிழா…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கோயில் திருவிழாவில் யானை மிரண்ட போது பக்தர்கள் சிதறியடித்து ஓடியதில் ஐந்து பேர் காயம் அடைந்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கரும்புக் கோணம் தேவி கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் முக்கிய நிகழ்வான யானை மீது தேவி ஊர்வலம்  வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஞ்சிர கோட்டு சேகர் என்கிற யானை திடீரென  மிரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது யானை  தும்பிக்கையை எடுத்து வீசியதில் இரு பக்தர்கள் காயம் அடைந்தனர்.
அப்பரபரப்பில் பக்தர்கள் சிதறியடித்து ஓடியதில் மேலும் மூவர் என ஐந்து   பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தின் போது பாகன்கள் விரைந்து செயல்பட்டு யானையை கட்டுக்குள் கொண்டு வந்ததால், யானை மீது அமர்ந்து இருந்த பூஜாரிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதோடு பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது. மேலும், யானை மிரண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.