மேட்டுப்பாளையம் அருகே குன்னூர் மலைப்பகுதியில் இரவு நேரத்தில் சுற்றுலா
பயணிகள் வாகனங்களை வழி மறித்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காட்டு யானைகள் கரடி சிறுத்தை புள்ளிமான் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இப்பபகுதியில் யானைகளின்
எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா காடுகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளதால் இங்கு கூட்டம் கூட்டமாக யானைகள் வந்து செல்வது வழக்கம்
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் 3 வது கொண்டை ஊசி வளைவில் நேற்று இரவு இரண்டு காட்டு யானைகள் சுற்றுலா வாகனங்களை வழிமறித்தது. யானைகள் சாலை ஓரத்தில் நிற்பதை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் தங்களது வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்திவிட்டனர்.
சுமார் 30 நிமிடம் யானை சாலையில் நடுவே வந்து நின்றது. மேலும் வாகனங்கள்
முன்னேறி செல்வதை தடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஒரு வழியாக யானை அங்கு இருந்து சென்றதை தொடர்ந்து போக்குவரத்து மீண்டும் சீரானது .







