பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது: அண்ணாமலை கண்டனம்!

பிரபல பதிப்பாளரும், மேடை பேச்சாளருமான பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே…

பிரபல பதிப்பாளரும், மேடை பேச்சாளருமான பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. இதில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

மேலும், பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி பெரம்பலூரை சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு என்பவர்  குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து, வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக IPC 153, 153A உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த குன்னம் போலீசார், இன்று காலையில் பத்ரிசேஷாத்ரியை கைது செய்தனர்.

இந்நிலையில் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைதுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.