அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றார்.

அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக இன்று அதிமுக தலைமை அலுவலகம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக தலைமை அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லத்திலிருந்தே உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக அலுவலகத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட அறைகளையும் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

கரகாட்டம், செண்டை மேளம், தப்பாட்டம், பேண்ட் வாத்தியத்துடன் கூடிய தோரண வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வருகை தரும் எங்கள் சாமி எடப்பாடி பழனிச்சாமி என எம்ஜிஆர் மாளிகை நுழைவாயிலில் வாழை மரம், பலூன் அலங்காரத்துடன் முகப்பு பேனரும் வைக்கப்பட்டிருந்தது.

அதிமுகவில் எழுந்த பிரச்சனை, பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு போன்ற சூழல் காரணமாக எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் செல்லாமல் இருந்த நிலையில் 72 நாட்களுக்கு பிறகு இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி அதிமுக
அலுவலகம் சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.