போா், மனித உரிமை மீறல்கள் போன்ற காரணங்களால் கடந்த 2 மாதங்களில் உலகம் முழுவதும் சுமாா் 11 கோடி போ் புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா.அகதிகள் நல ஆணையா் ஃபிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து ஃபிலிப்போ கிராண்டி கூறியதாவது:
“குறிப்பிட்ட இனத்தவர்களை குறிவைத்து நடத்தப்படும் வன்முறை, போா், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான மோதல் உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில் சுமாா் 11 கோடி போ் தங்களது வாழ்விடங்களை விட்டு புலம் பெயா்ந்துள்ளனா்.
சூடானிலில் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக ஏராளமானவா்கள் புலம் பெயா்ந்து வருகின்றனா். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் அதிபா் அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக போர் நடந்து வருகிறது.
இந்த சண்டைக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது உலகின் மோசமான நிலையை எடுத்துக் காட்டுகிறது”
இவ்வாறு ஃபிலிப்போ கிராண்டி தெரிவித்தார்.







