வறுமையின் காரணமாக குடிநீரை மட்டுமே குடித்து வாழ்ந்த குடும்பம்! விபரீத முடிவுக்கு தள்ளிய ஏழ்மை!

மதுரையில் முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரியின் குடும்பத்தினர் வறுமை காரணமாக சில வாரங்களாக குடிநீர் மட்டுமே குடித்து வாழ்ந்து வந்த நிலையில்,  மூன்று பேர் சேர்ந்து உயிரை மாய்த்து கொண்ட நிகழ்வு நடந்தேரியுள்ளது.  மதுரை மாநகர்…

மதுரையில் முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரியின் குடும்பத்தினர் வறுமை காரணமாக சில வாரங்களாக குடிநீர் மட்டுமே குடித்து வாழ்ந்து வந்த நிலையில்,  மூன்று பேர் சேர்ந்து உயிரை மாய்த்து கொண்ட நிகழ்வு நடந்தேரியுள்ளது. 

மதுரை மாநகர் தாசில்தார்நகர் அன்பு நகர் ராஜராஜன் தெருவை சேர்ந்த பாண்டியன்
என்ற மருத்துவர் சுகாதாரத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது
மருத்துவர் பாண்டியன் தனது மனைவி வாசுகி மற்றும் மகள் உமாதேவி மகன்
கோதண்டபாணி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
#poverty | #Madurai | #Tamilnadu | #TragicEnd |
இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவர் பாண்டியன் தனது மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் பாண்டியனின் மனைவி வாசுகி மற்றும் திருமணமாகாத நிலையில் இருந்த மகள் உமாதேவி (45) மகன் கோதண்டபாணி (42) ஆகிய மூவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். பாண்டியன் பிரிந்துசென்ற விரக்தியில் இருந்த குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்துள்ளனர்.

வீட்டிற்குள்ளயே இருந்த காரணமாக உரிய வருமானமின்றி வீட்டில் இருந்த
பணத்தை செலவு செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகை மற்றும் பொருட்களை விற்று
அந்த பணத்தில் சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உணவிற்கு வழியின்றி வறுமை ஏற்பட்டுள்ளது. அதோடு மின் கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு
இருட்டிலேயே வசித்து வந்துள்ளனர். மேலும் வீட்டில் மோட்டார் பயன்படுத்த முடியாத
நிலையில் தண்ணீர் இன்றி இயற்கை உபாதைகளுக்கு கூட செல்ல முடியாத நிலையில் வசித்து வந்ததோடு, அவ்வபோது வாரத்திற்கு ஒரு முறை மட்டும் குடிநீரை வாங்கி அதனை குடித்தே வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீரும் வாங்காத நிலையில் வீடு பூட்டியே கிடந்துள்ளது.

இதனையடுத்து இன்று காலை வீட்டை சுற்றிலும் கடுமையான துர்நாற்றம் வீசிய
நிலையில் அருகில் இருந்த பொதுமக்கள் அண்ணாநகர் காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை திறந்து பார்த்த போது, கோதண்டபாணி தூக்கில் தொங்கிய நிலையிலும், வாசுகி மற்றும் உமாதேவி ஆகிய இருவரும் விஷம் அருந்தி உயிரிழந்த நிலையில் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை தொடர்ந்து தடயவியல் கைரேகை நிபணர்கள்
ஆதாரங்களை எடுத்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் சினேகபிரியா மற்றும் அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அழுகிய நிலையில் இருந்த அந்த மூன்று உடல்களையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.

சொந்த வீட்டில் வசித்த நிலையிலும் வீட்டற்குள்ளயே முடங்கிய நிலையில் மனநிலை
குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு குடும்ப வறுமையும் சேர்ந்ததால் மூவரும் உயிரை மாய்த்துக் கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பல ஆண்டுகளாக மக்கள் நெருக்கமான பகுதியில் குடியிருந்தும் அருகில்
உள்ளவர்களிடம் பேசாமல் வீட்டிற்குள்ளயே முடங்கியதால் அவர்களின் பெயர் கூட அருகில் இருப்போருக்கு தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.