முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த முடியுமா? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு நான்காயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், சென்னையில் மட்டும் தொற்று பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை அடுத்து, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், மே 3-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை, பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுத்தேர்வை, திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது ஓரிரு வாரங்கள் தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மண்டல கால பூஜை; சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

G SaravanaKumar

“பல வகையான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா வளர்ந்துள்ளது” – பிரதமர் மோடி பெருமிதம்

Web Editor

தமிழ்நாட்டில் வரும் 22ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

Arivazhagan Chinnasamy