சிக்கன் 65 சரியாக இல்லை எனக் கூறி மதுக் கடையில் உள்ள நாற்காலிகளை உடைத்த போதை நபரின் வீடியோ வைரல் ஆகி வருகிறது
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டி பகுதியில் அரசு மதுபானக் கடை உள்ளது. பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சேர்ந்த ஐயர் என்பவர் அரசு
மதுபானக் கடையில் உள்ள மதுக் கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, சிக்கன் 65 வேண்டும் என்று பாரில் கேட்டுள்ளார். சிக்கன் 65 சரியாக இல்லை என்று கூறி மதுக் கடையில் உள்ள நாற்காலிகளை உடைத்தும், மது குடிக்க வந்தவர்களை அடித்தும் ரகளையில் ஈடுபட்டார். மது போதையில் இவர் செய்த ரகளை வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்நிலையில், மது போதையில் ரகளையில் ஈடுபட்ட ஐயர் குறித்து
மதுபான கடை பார் உரிமையாளர் கரம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் மனு
அளித்திருந்தார். இதன் அடிப்படையில் கரம்பக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து
மது போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-ம.பவித்ரா








