காவல் நிலையத்தில் குடிபோதையில் தகராறு?… ஜெயிலர் வில்லன் கைது!!

கேரளாவில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக ஜெயிலர் திரைப்பட வில்லன் நடிகா் விநாயகனை போலீசாா் கைது செய்தனா். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும்…

கேரளாவில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக ஜெயிலர் திரைப்பட வில்லன் நடிகா் விநாயகனை போலீசாா் கைது செய்தனா்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் 600 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த படத்தில் விநாயகன் என்ற நடிகர் மிக அபாரமாக வில்லன் கேரக்டரில் நடித்திருப்பார் என்பதும் இந்த படத்தின் வெற்றிக்கு அவருடைய பங்கும் மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் வெளியாக இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் வில்லன் நடிகர் விநாயகன் கேரள மாநில போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறி போலீசார் அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மதுபோதையில் இருந்த விநாயகன், காவல்துறை அதிகாரியை தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

https://twitter.com/KuttyNaai_/status/1716895044391903256

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.