ஆண்டிமடம் திரௌபதி அம்மன் கோயில் திருவிழா – பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்து நேர்த்திகடன்!

ஆண்டிமடம் அருகே திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. …

ஆண்டிமடம் அருகே திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற
திரௌபதி அம்மன் கோயில் உள்ளது.  இக்கோயிலில்  ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.  இக்கோயில் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையடுத்து அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அரிச்சந்திரா நாடகம் நடைபெற்று வந்தது.  இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.   தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து, பிரத்யகமாக அமைக்கப்பட்ட அக்கினி குண்டத்தில் இறங்கி தீ
மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

அதன்பின்னர் நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள் வரிசையில் நின்று, அம்மன் முன்பு சாட்டையடி வாங்கிய காட்சிகள் அருகில் இருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இவ்விழாவில் ஆண்டிமடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.