அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்… மே 1-ல் பில்லாவுடன் ரீ-ரிலீஸ் ஆகிறது ‘தீனா’!

நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளியான ‘தீனா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.  அண்மைக் காலங்களில் புதிய திரைப்படங்களை தாண்டி ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து…

நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளியான ‘தீனா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 

அண்மைக் காலங்களில் புதிய திரைப்படங்களை தாண்டி ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ரசிகர்கள் மத்தியிலும் அடுத்தடுத்து தங்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படங்களில் மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்து வருகிறது.

அந்த வகையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமாரின் சில ஹிட் திரைப்படங்களையும் ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அவரது ரசிகர்களிடம் இருந்து எழுந்து வருகிறது. குறிப்பாக மே 1-ம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஹிட் திரைப்படங்களை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சமூக ஊடகங்கள் வாயிலாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து அஜித்குமாரின் பிறந்தநாளான மே 1-ம் தேதி ‘பில்லா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அஜித்குமாரின் ‘தீனா’ திரைப்படமும் டிஜிட்டல் பதிப்பில் மே 1-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “ஜடேஜாவின் பந்துவீச்சு திருப்புமுனையாக அமைந்தது..!” – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

கடந்த 2001-ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘தீனா’. இதில் அஜித்குமார், லைலா, சுரேஷ் கோபி உள்ளிட்டோர் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படம் மாபெரும் ஹிட் படமாக வலம் வந்தது. ‘தீனா’ படத்திற்கு பின்னரே நடிகர் அஜித்குமாருக்கு ‘தல’ என்ற பட்டம் அவரது ரசிகர்களால் கொடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இந்த திரைப்படம் நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.