தமிழ்நாட்டில் இன்றைய தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.
அதே போல், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. தங்கம் விலை ஆனது கடந்த இரு தினங்களாக விலை குறைப்பை கண்டது. இது தீபாவளிக்கு முன் நகை வாங்குவோர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரம் குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து. ஒரு சவரன் ரூ.44.920-க்கும் கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.5.615-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.76.20-க்கும், ஒ ரு கிலோ வெள்ளி ரூ.76,200-க்கும் விற்கப்படுகிறது.







