தனியார் தொலைகாட்சி தொடர்களில் நடித்து வந்த கவின் லிப்ட் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானர். அதற்கு முன்னரே அவர் பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்,
லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த டாடா, ஸ்டார், கிஸ், பிளடி பெக்கர் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் ‘ஹாய்’ என்னும் புதிய திரைப்படத்தில் அவர் நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் கவின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர். :)” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.




