ஆத்தூரில் Door Delivery செய்யப்படும் கஞ்சா பொட்டலங்கள் – 2 இளைஞர்கள் கைது!

ஆத்தூரில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தலைவாசல், வீரகனூர், தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக…

ஆத்தூரில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தலைவாசல், வீரகனூர், தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் வேளைக்கு செல்பவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்கை சீரழிவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது.

அதன் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தின் மூலம் கஞ்சா பொட்டலங்கள் [டோர் டெலிவரி] விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் [19] மற்றும் ரவிசங்கர் [20] ஆகிய இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து தனிப்படை அதிகாரிகள் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.