முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆளுநர் சொல் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டாம்; ஆளுநருக்கு வேறு வேலை இருக்கிறது -கவிப்பேரரசு வைரமுத்து

ஆளுநர் சொல் ஆராய்ச்சியில் ஈடுபடுவது விட தமிழ்நாட்டில் போதைப்
பழக்கத்திலிருந்து தமிழர்களை மீட்டெடுப்பதற்கு என்னென்ன வழிகள் உண்டு என்று
சிந்திக்க வேண்டிம் என கவிப்பேரரசு வைரமுத்து கூரியுள்ளார்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை
அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார், தொடர்ந்து வாழ்க
திருவள்ளுவர் வளர்க தமிழ்நாடு, வெல்க திருக்குறள் இன்று முழக்கமிட்டார்,
பாடகர் உன்னிகிருஷ்ணன், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் பொதுமக்கள் என
50க்கும் மேற்பட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வைரமுத்து,   தமிழர் திருநாளுக்கும் திருவள்ளுவர் திருநாளுக்கும் இணைத்து விழா காணும் தமிழ்
சமூகத்தை நான் வணங்குகிறேன்.  தமிழர் திருநாளாகிய பொங்கலுக்கும் திருவள்ளுவருக்கும் ஒற்றுமை உள்ளது இருவரும் மத நம்பிக்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டவர்கள்.  பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை அல்ல உழைப்பு சார்ந்தது இயற்கை சார்ந்தது சூரியனையும் மண்ணையும் மாட்டையும் உழைப்பையும் மையப்படுத்துகிற திருநாள் பொங்கல் திருநாள் என பேசினார்.


மேலும், திருவள்ளுவரும் எந்த மதத்தை சார்ந்த ஞானி அல்ல உலகத்தை சிந்தித்தார் உலக
மனிதனை சிந்தித்தார். திருவள்ளுவர் தமிழ் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, இந்திய சமுதாயத்திற்கு மட்டுமல்ல உலகத்தில் வாழுகின்ற எல்லா மனிதர்களுக்கும் ஞானப் பரிசுத்தாக திருவள்ளுவரை வணங்குவோம். அரசியல் குறும்பு செய்யும் நண்பர்களுக்கு வேண்டுகோள், திருவள்ளுவருக்கு நிறமாற்றுகிறீர்கள் காவிச் சாயம் பூசுகிறீர்கள் இதனால் திருவள்ளுவர் மதம் மாறிவிடுவாரா நெறி மற்றும் கொள்கை மாறி விடுவாரா தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டும் என கூறினார்.

அத்துடன், மக்கள் திருவள்ளுவர் சிலைக்கு சிலைக்கு நிறம் மாற்றுவது அரசியல் குரும்பு
என்று சொல்லுவார்கள் அதை தவிர மிக ஆழமாக கருத்தியல் ரீதியாக ஆன காரணமாக இல்லை என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும். திருக்குறள் என்பது பொது சொத்து அதை ஏன் தனி சொத்தாக மாற்ற வேண்டும்  என பேசினார்.


மேலும், வெளிநாட்டில் இருந்து ஒருவர் வந்தார் அவருக்கு திருவள்ளுவர் சிலையையும்
திருக்குறள் நூலையும் வழங்கி எங்களது அடையாளம் இதுதான் என்று செல்லலாம்.
திருவள்ளுவரை வட இந்தியர்கள் உலகம் கொண்டாட வேண்டும். திருக்குறள்
படிப்புக்கான நூல் மட்டுமல்ல அது வாழ்வுக்கான நூல். தமிழகம் தமிழ்நாடு என்று ஆளுநர் பேசுவது சர்ச்சை கிடையாது அது அவருடைய கருத்து, அவர் சொல்லும் கருத்து.  தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாடு என்று சொல்லும் பொழுது எங்களுக்கு கூடுதல் நயம் உள்ளது என கூறினார்.

மேலும், சொல் ஆராய்ச்சியில் ஈடுபடுவது இந்தியாவின், தமிழ்நாட்டில் இன்றைய தேவையா. தமிழ்நாட்டின் பொருளாதாரம் கல்வி ஆகியவற்றை உயர்த்துவதற்கு என்னென்ன வழிகள் உள்ளது என்பதை, தமிழ்நாட்டில் போதைப் பழக்கத்திலிருந்து தமிழர்களை மீட்டெடுப்பதற்கு என்னென்ன வழிகள் உண்டு என்று சிந்திக்க வேண்டிய நேரத்தில் சொல்லாடலில் ஈடுபட்டு வருகிறார்கள் புலவர்களைப் போல, இது புலவர்களுக்கு
விட்டுவிடுங்கள் ஆளுநருக்கு வேறு வேலை இருக்கிறது என்று தான் கருதுகிறேன் இது
உண்மை என வைரமுத்து கூறினார்.

அத்துடன், தமிழ்நாட்டின் தமிழரின் ஆண்டு வருமானம் 3 ஆயிரத்து நூறு டாலர். மராட்டியத்தில் 600 டாலர் தமிழ்நாட்டில் 3100 டாலர் என்பது போதாது. உலக ஜிடிபி என்பது 13000 டாலர் இதை நோக்கி தமிழரின் வருமானத்தை எப்படி உயர்த்த வேண்டும் என்பது தான் ராஷ்டிரபதி, ராஜ் பவனின் தேவை தமிழ்நாட்டின் சென்சார்ச்சியில் கோட்டை
என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். எங்களை அப்படி மேம்படுத்த வேண்டும் வீண்
சர்ச்சையில் ஈடுபட்டு தமிழையும் குழப்ப வேண்டாம் தமிழர்களையும் குழப்ப வேண்டாம். எனவும் அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram