லண்டனில் ஜகந்நாதர் கோயில் கட்ட ரூ.250 கோடி நன்கொடை – வியக்க வைத்த ஒடிசா தொழிலதிபர்!

லண்டனில் அமைக்கப்பட உள்ள முதல் ஜகந்நாதர் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்காக ஒடிசாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.250 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். லண்டனின் புறநகர்ப் பகுதியில் 15 ஏக்கர் நிலத்தில், புதிதாக ஸ்ரீ ஜகந்நாதர்…

லண்டனில் அமைக்கப்பட உள்ள முதல் ஜகந்நாதர் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்காக ஒடிசாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.250 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

லண்டனின் புறநகர்ப் பகுதியில் 15 ஏக்கர் நிலத்தில், புதிதாக ஸ்ரீ ஜகந்நாதர் கோயில் அமைக்கப்பட உள்ளது. இதுவரை சுமார் 70 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டிருக்கும் நிலையில், கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட கட்டுமானப் பணிகள், 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image

தொடர்ந்து இந்த கோயிலுக்காக நிதி திரட்டும் பணியில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்ரீ ஜகந்நாத் சொசைட்டி எனும் ஆன்மீக தொண்டு நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர் பிஸ்வநாத் பட்நாயக், லண்டன் ஜனந்நாதர் கோயில் அமைக்கும் பணிகளுக்காக ரூ.250 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதையும் படியுங்கள் : காங்கிரசுடன் கூட்டணி? தனித்து போட்டி? – 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

அட்சய திருதியை நாளை முன்னிட்டு ஸ்ரீ ஜகந்நாத் சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, பைனெஸ்ட் எனும் குழுமத்தை நடத்திவரும் தொழிலதிபர் பிஸ்வநாத் பட்நாயக், இந்த நன்கொடையை வழங்கியுள்ளார். அயல்நாட்டில் கட்டப்படும் கோயிலுக்கு இவ்வளவு பெரிய தொகையை ஒருவர் நன்கொடையாக வழங்குவது இதுவே முதல்முறை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.