தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தொடர்பை ஏற்க மறுக்கிறாரா விஜயதரணி எம்எல்ஏ? வெளியான தகவல்…

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி,  தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தொடர்பை ஏற்க மறுப்பதாக அக் கட்சி தெரிவித்துள்ளது.  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று…

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி,  தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தொடர்பை ஏற்க மறுப்பதாக அக் கட்சி தெரிவித்துள்ளது. 

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.   தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பாஜகவில் இணையப் போவதாக கடந்த ஒரு வாரமாக தகவல் பரவியது.  இதனைத் தொடர்ந்து,  விஜயதரணியை,  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் இன்று காலை தொடர்பு கொள்ள முயற்சி செய்ததாகவும் அவர் தொடர்பை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடருக்கு கூட விஜயதரணி கலந்து கொள்ளாத நிலையில், அவரை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சி செய்தும் அவர் அழைப்பை ஏற்கவில்லை என்றும் அந்த செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  மேலும்,  தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டியுடன் விஜயதரணி தொடர்பில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.