நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (டிச.13) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் தென்தமிழக…

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (டிச.13) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் தென்தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வலுவிழக்கக் கூடும் எனவும், இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் காலை முதலே கனமழை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நாளை தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி இம்மூன்று மாவட்ட பள்ளிகளுக்கும் நாளை (டிச.13) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தூத்துக்குடியில் பல்கலைக்கழக தேர்வு எழுதும் மாணவர்களை தவிர மற்ற கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.