“கடைசி விவசாயி” திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார்.
காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் ‘கடைசி விவசாயி’. நடிகர்கள் விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோர், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக இது உருவாகியுள்ளதாக தெரிகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் சமீபகாலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் படமான “கடைசி விவசாயி” ரிலீஸ் தேதியை நடிகர் விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார்.
#KadaisiVivasayi will hit the screens on Feb 11th.#KadaisiVivasayiFromFeb11 @dirmmanikandan @vsp_productions #TribalArtsProduction #ArtistsCoupe #RichardHarvey @Music_Santhosh @7CsPvtPte @iYogiBabu @proyuvraaj @Raichalrabecca @Aravindh_dir @r_kumarshivaji @cineinnovations pic.twitter.com/uHomxBbno0
— VijaySethupathi (@VijaySethuOffl) January 30, 2022
ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யும் வகையில், படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாக தயாராகிவிட்டது. தமிழகத்தில் தற்போது வார இறுதி நாள் ஊரடங்கு உத்தரவு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய திரைப்படங்களின் ரிலீஸ் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், ‘கடைசி விவசாயி’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என நடிகர் விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டடி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.